Monday, November 10, 2014

கானகன் லக்‌ஷ்மி சரவணகுமார்

கானகன்     லக்‌ஷ்மி சரவணகுமார்

''//ஒவ்வொரு நாளும் அந்தக் காடு ஆயிரம் துயரங்களை எதிர் கொள்ளும்படி மாறிப்போயிருந்ததை தாங்கக்கூடிய திராணியில்லை அவனுக்கு.
ஏன் இந்தக்காடு எதற்கும் எதிர் வினையாற்றுவதில்லை?//”

சுயநலமிக்க மனிதனின் ஆளுமை காட்டின் மீது.., மீண்டும் ., மீண்டும் தொடர்ந்து படர்ந்து கொண்டே இருக்கிறது.
நிலைப்படுத்திக்கொள்ளும் தன் இயல்பில்..காடும்., காட்டின் விலங்குகளும்., மலையின் மனிதர்களும் துவண்டு கொண்டே இருக்கிறார்கள்.
தன் உணர்வைத்தொலைத்துவிட்ட மனிதன் மேலும்மேலும் மிகப்பெரிய அளவில் சுரண்டிக்கொண்டே இருக்கிறான்.
சுரண்டலில்.....
கானகன் மட்டுமல்ல..,காடும் மாறிப்போகும் நிலைப்பாட்டை ., சுவாரசியம் மிகுந்த ‘’காம,குரோத’’த் த்தொணியில் எழுதி...,                  தம் இரண்டாவது புனைகதையில் விருவிருப்பைத் தந்திருக்கிறார்.... லக்‌ஷ்மிசரவணகுமார்.

’’கானகன்’’
இருட்டின் வெளிச்சமும்,வெளிச்சத்தின் இருட்டும் ஒன்றை ஒன்று வேட்டையாட...,
சுற்றிச்சுற்றி வரச்செய்கிறது காடு.....
காட்டின் விலங்குகளுடனும்... மனிதர்களுடனும்.